Lyricist Vaali

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் பாடல் வரிகள்

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி@#!!

கொட்ட வேணும் மேளம்..
கைய கட்ட வேணும் யாரும்..
அஞ்சி நிக்கும் ஊரும்..
அருள் வாக்கு சொல்லும் நேரம்..

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..

அன்னாடம் நாட்டுல வெண்டைக்காய், சுண்டைக்காய்
விலை ஏறி போகுது மார்க்கெட்ல..

அன்னாடம் நாட்டுல வெண்டைக்காய், சுண்டைக்காய்
விலை ஏறி போகுது மார்க்கெட்ல..
விலை ஏறி போகுது மார்க்கெட்ல..

என்னாட்டம் ஏழைங்க அத வாங்கி திங்கதான்
துட்டில்ல சாமி என் பாக்கெட்ல..
துட்டில்ல சாமி என் பாக்கெட்ல..

வீட்டுக்கு வீடு எங்களை தான்,
மரம் ஒன்னு வைக்க சொல்லுறாங்க..
மரமேதான் எங்க வீடாச்சி சாமி,
ஏழைங்க வாய மெல்லுறாங்க..

எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் உன்னாலதான்..
கண்ணால பாத்து நேராக்கி காட்டு முன்னாலதான்..

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..

ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே..

ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே..
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே..

எல்லோரும் போல் என்னை நீயும் தான் தள்ளாம
எந்நாளும் தாய் என காக்கணுமே..
உன்கிட்ட ஓர் வரம் கேக்கணுமே..

எப்போதும் காவல் நான் இருப்பேன்..
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்..
பொல்லாப்பு பேசும் ஊர் சனம்தான்..
புண்ணாகி போச்சு என் மனம் தான்..

என்னாட்டம் சாமி எல்லோருக்கும் சொந்தம்
எப்போதும் தான்..
என்னோடு நீயும் உன்னோடு நானும்
எந்நாளும் தான்..

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..

கொட்ட வேணும் மேளம்..
கைய கட்ட வேணும் யாரும்..
அஞ்சி நிக்கும் ஊரும்..
அருள் வாக்கு சொல்லும் நேரம்..

ஏய்! கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி..
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்
சூடம் ஏத்தி காமி..

Movie: Chinna Thayee
Music: Ilaiyaraaja
Lyrics: Vaali