Konji Konji Male Song Lyrics

Movie: Veera (1994)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட

ஆண்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே

ஆண்: ஓ அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே

ஆண்: அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும்

ஆண்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

ஆண்: மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது மேகம் வந்து தாலாட்ட பொன் மயில் ஆடுது வெண்பனி தூவுது பூமி எங்கும் சீராட்ட

ஆண்: ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட அன்னங்களின் ஊர்வலம் ச க ரி ம க ம ம த ப நி ட ச ரி நி நி சுவரங்களின் தோரணம் எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

ஆண்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

ஆண்: மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில் மாதர் தம்மை மறந்தாட ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே ஆற்றில் பொன் போல் அலையாட

ஆண்: காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட இயற்கையின் அதிசயம் ச க ரி ம க ம ம த ப நி ட ச ரி நி நி வானவில் ஓவியம் எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

ஆண்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட

ஆண்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே

ஆண்: ஓ அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே

ஆண்: அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும்

ஆண்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

குழு: { கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட } (4)
குழு: { கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட } (2)