Lyricist Pa.Vijay

கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் பாடல் வரிகள்

கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல்
உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல்

இது சொல்லாத சுகமா இதை வேண்டாத மனமா
காதலில் தோன்றிடும் வலிகளும் சுகம் தானே..

கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம்
காதல் அழகிய காதல்

வெகுதூரம் நீ சென்று திரும்பித்தான் ஒரு பார்வை
நீ பார்ப்பதும் சுடும் இம்சைதான்

இதழ் ஓரம் மெதுவாக ஈரங்கள் செய்வாயே
அதை காண்பதும் புது இம்சைதான்

உன்னுடன் நான் பேசும் ஒவ்வொரு நொடியும் வார்த்தை இல்லா இம்சை
சட்டென ஏனோ உன்வசம் தோன்றிடும் மௌனம் கூட இம்சை
உன்னாலே உயிர் தாங்கும் இம்சை எல்லாம் சுகமே

கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல்
உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல்

தெரியாமல் உன்கைகள் என்மேலே பட்டாலும்
உடன் விலகுமே அது இம்சைதான்

உன்னுடன் தொலைபேசி நான் பேசி முடிக்கின்ற
கடைசி நொடி அதும் இம்சைதான்

சாலையில் எதிரே வருபவர் எல்லாம் உன் போல் தோன்றும் இம்சை
உன் பெயர் தவிர எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லா இம்சை
வலித்தாலும் துடித்தாலும் இம்சை எல்லாம் சுகமே..

கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல்
உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல்

இது சொல்லாத சுகமா இதை வேண்டாத மனமா
காதலில் தோன்றிடும் வலிகளும் சுகம் தானே…

Movie: Ninaithathu Yaaro
Lyrics: Pa.Vijay
Music: X. Paulraj