Lyricist Vairamuthu

கொடியிலே மல்லியப்பூ பாடல் வரிகள்

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால

பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது

பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே…

Movie: Kadalora Kavithaigal
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja