கண்ணு தங்கோம் ராசாத்தி பாடல் வரிகள்

கண்ணு தங்கோம் ராசாத்தி உன்னை கண்டாலே
நெஞ்சு முச்சூடும் தீவாளி சொன்னா நம்பு மவராசி
உன் பேர் சொல்லாட்டி மழை ஊருக்கு பெய்யாதடி

அழகி உன் புன்னகை அரை டஜன் பௌர்ணமி
ஆசையா பேசுடி மனசுல மார்கழி

ராணி காளி எசமானி பார்வை பார்த்தாலே
மாமன் உள்ளார பூமாரி லேசா மொறைச்சாலே
மூச்சு தடுமாறி நாடி நரம்பெல்லாம் முக்காடுதே

ஒனக்கும் மேல ஊருல எனக்குன்னு யாரடி
அடிச்சு நான் சொல்லுவேன் உனக்கு நான் காலணி

ராசாத்தி… ராசாத்தி… ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
மவராசி… மவராசி
ராசாத்தி… ராசாத்தி… ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
மவராசி… மவராசி

ராசா சிங்கம் என் சாமி யாரு சொன்னாலும்
எனக்கு நீதானே சரிப்பாதி
வாயா பாவி காத்திருக்கேன் போனா போவட்டும்
என்னை கை கோர்த்து கரை சேரய்யா

தனியில நடக்கையில் எனக்கு நீ தொனையிரு
மடியில் மனசுல உறங்கிட எடங்கொடு

கண்ணு தங்கோம் ராசாத்தி
ஓ……ஓ…..ஹோ ஹோ ஹோ ஓஒ…..
கண்ணு தங்கோம் ராசாத்தி
ஹ்ம்ம்……ம்ம்ம்ம்…

Movie: Vaanam Kottattum
Lyrics: Siva Ananth
Music: Sid Sriram