Amuthavalli cover

Movie: Amuthavalli (1959)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா..ஆஆ..ஆஅ. ஹோ.ஓ.ஓ.ஹோ.. கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா… கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா…

ஆண்: முகமலரை மறைப்பதனாலே மனது மறையுமா ..ஆஅ.. முகமலரை மறைப்பதனாலே மனது மறையுமா தங்க மோக வண்ணச் சிலையே உண்மைச் சேதி தெரியுமா…

ஆண்: சுகம் வளர்க்கும் கதைகள் கூறும் உனது மேனியே சுகம் வளர்க்கும் கதைகள் கூறும் உனது மேனியே ஆனால் சுத்த சைவ விரதங் கொண்டான் இந்த ஞானியே… சுத்த சைவ விரதங் கொண்டான் இந்த ஞானியே…

ஆண்: கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா…

ஆண்: வெண்ணிலாவை மனிதன் கைகள் நெருங்க முடியுமா இங்கே வீசும் இளம் தென்றல் தன்னைப் பிடிக்க முடியுமா

ஆண்: என் நிலையும் அதுதான் என்றால் உனக்குப் புரியுமா என் நிலையும் அதுதான் என்றால் உனக்குப் புரியுமா இருவர் இங்கே இருவர் ஆனால் உறவு பிறக்குமா இருவர் இங்கே இருவர் ஆனால் உறவு பிறக்குமா

ஆண்: கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா…

ஆண்: தந்தை யாரோ தாயும் யாரோ ஆரிராரோ சிந்தை எல்லாம் சொந்தம் இல்லை ஆரிராரோ கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ ‘ கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ