Aandavan Kattalai  cover

Movie: Aandavan Kattalai (1964)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண் மற்றும்
பெண்: அஹ அஹ ஹா அஹ அஹ ஹா ஹா ஆஹா

ஆண்: கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன

ஆண்: பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

ஆண்: கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன

ஆண்: பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

பெண்: கட்டழகு துள்ள துள்ள காதல் கதை சொல்ல சொல்ல

பெண்: பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா

பெண்: கட்டழகு துள்ள துள்ள காதல் கதை சொல்ல சொல்ல

பெண்: பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா

ஆண்: நெய் மணக்கும் கூந்தலுக்கு நீல மலர் வங்கி வந்தேன் வாங்கி வந்த மலர்களிலே வண்டு வந்து மோதுதம்மா

பெண்: வண்டு வந்து தேன் எடுக்க உண்டு விட்ட போதையிலே வட்டமிட்டுப் பாடுதையா தொட்டுத் தொட்டுப் பேசுதையா

ஆண்: தொட்டு தொட்டு பேசையிலே
பெண்: சொர்க்கமே தோன்றுதையா
ஆண்: பட்ட இடம் அத்தனையும்
பெண்: பனிப் போல் குளுருதையா

ஆண்: கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன

ஆண்: பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

ஆண்: வாழைப்பூ கைகளுக்கு வளையல்கள் வாங்கி வந்தேன் வாங்கி வந்து சூடி விட்டேன் தாங்கி கொள்ள நான் வரவா

பெண்: இல்லை என்று சொன்னதில்லை என்னவென்று கேட்டதில்லை தொல்லை என்று எண்ணவில்லை சொன்ன மொழி கேட்டிருப்பேன்

ஆண்: சொன்ன மொழி கேட்டிருப்பேன்
பெண்: உன்னழகைப் பார்த்திருப்பேன்
ஆண்: கண் திறந்து காத்திருப்பேன்
பெண்: பொன்னுலகம் பார்த்திருப்பேன்

ஆண் மற்றும்
பெண்: சொன்ன மொழி கேட்டிருப்பேன் உன்னழகைப் பார்த்திருப்பேன் கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே

ஆண் மற்றும்
பெண்: ஆஹாஹா ஆஹா ஆஹா ஹா ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஆஹ ஆஹ அஹா ஹா. ஒஹோ ஹோ ஒஹோ ஹோ ஹோ