Movie: Anandhi (1965)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan
Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
ஆண்: நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும் கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
ஆண்: உன்னைப்போல் குழந்தை இல்லை உன்னைப்போல் துணையும் இல்லை உன்னைப்போல் குழந்தை இல்லை உன்னைப்போல் துணையும் இல்லை
ஆண்: உன்னாலே மலர்ந்த உள்ளம் என்னாத நாளும் இல்லை என்னாத நாளும் இல்லை
ஆண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
ஆண்: அந்த நாள் மறைந்ததம்மா.. இன்று நான் மனிதனம்மா… அந்த நாள் மறைந்ததம்மா.. இன்று நான் மனிதனம்மா…
ஆண்: செண்டாடும் வடிவழகை கண்டாடும் கலைஞனம்மா கண்டாடும் கலைஞனம்மா
ஆண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
ஆண்: அன்னையே உன் வடிவம் தந்தையே உன் இதயம் அன்னையே உன் வடிவம் தந்தையே உன் இதயம்
ஆண்: அன்பே உன் துணையிருக்க என் பாடல் முடிவதெங்கே என் பாடல் முடிவதெங்கே
ஆண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும்
ஆண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்