Movie: Athma (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K.J. Yesudas and S. Janaki
Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கல்லூரி வந்து போகும் வானவில் நீதான் அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
பெண்: கடற்கரை தன்னில் நீயும் நானும் உலவும் பொழுது
ஆண்: பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது
பெண்: இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே
ஆண்: குளிர் வாடை தான் செந்தளிரிலே இந்த வாலிபம் தன் துணையிலே
பெண்: இளம் மேனி உன் வசமோ
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
பெண்: உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்
ஆண்: மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
பெண்: வலையோசைகள் உன் வரவைக் கண்டு இசை கூட்டிடும் என் தலைவன் என்று
ஆண்: நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
பெண்: இன்ப ஊர்வலம் இதுவோ