Lyricist Vairamuthu

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வரிகள்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி

என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்..
காதல் முகம் கண்டுகொண்டேன்..

மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்..
காதல் முகம் கண்டுகொண்டேன்

மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்

கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்

உன்னைத் தேடியே இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ

ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய்

காதல் முகம் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய்
விரல் தொடும் தூரத்திலே ஹே ஹேய்ய்
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆஆஆஆ… நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது

கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்

நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்

ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்

கண்டுகொண்டேன்… கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்

விரல் தொடும் தூரத்திலே… விரல் தொடும் தூரத்திலே..
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்…

Movie: Kandukondain Kandukondain
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman