Kan Irandil Song Lyrics

Movie: Uthama Puthiran (2010)
Music: Anirudh
Lyricists: Annamalai
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

ஆண்: என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே

ஆண்: ஊருக்குள்ளே கோடி பொண்ணு யாரையும் நினைக்கலையே உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலியே

ஆண்: உன்னுடைய பார்வையிலே என் உடம்பு வேகுதடி பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி

ஆண்: ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

ஆண்: ஏதோ ஒண்ணு சொல்ல என் நெஞ்சுகுழி தள்ள நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம் கண்ணுமுன்னே தள்ளாட கண்ணாமூச்சி ஆட்டம் என் கண்ணுக்குள்ளே ஆட நீ சொல்லும் சொல்லே கேக்காமலே உந்தன் உள்ளம் திண்டாட

ஆண்: உள்ளுக்குள்ளே படபடக்க நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க கால் இரண்டும் ரெக்க கட்டி மேலே கீழே பரபரக்க பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே

ஆண்: ம்ம்ம்..ம்ம்ம்.ஹ்ம்ம்.ம்ம்ம் ம்ம்ம்..ம்ம்ம்.ஹ்ம்ம்.ம்ம்ம்

ஆண்: உன் முத்து முத்து பேச்சு என் சங்கீதமா ஆச்சு உன் சுண்டு விரல் தீண்டையில நின்னு போச்சு என் மூச்சு பஞ்சு மெத்த மேகம் அது செஞ்சு வெச்ச தேகம் நீ தூரத்தில நின்னா கூட பொங்கிடுது என் முகம்

ஆண்: முட்ட கண்ணு முழி அழகில் குத்தி குத்தி கொன்னவளே சிக்கி கிட்ட என் மனச ஊற வெச்சு துவச்சவளே ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே

ஆண்: ஊருக்குள்ளே கோடி பொண்ணு யாரையும் நினைக்கலையே உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலியே

ஆண்: உன்னுடைய பார்வையிலே என் உடம்பு வேகுதடி பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி

ஆண்: ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

ஆண்: என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே..