Lyricist Vairamuthu

கல்லூரி தாயே பாடல் வரிகள்

கல்லூரி தாயே கல்லூரி தாயே 
பத்து மாதம் இருந்தோம் பெற்ற தாயின் கர்ப்பத்தில் 
நான்கு ஆண்டு இருந்தோம் கற்ற தாயின் கர்ப்பத்தில்

களைத்து விடாதே எங்களை களைத்து விடாதே

வெள்ளை தாளாய் வந்தோம் வித விதமாய் நீ கிறுக்கினாய்
ஓஹோஹோஹோஓஹோ

எழுதிய வாசகம் அறியும் முன்னயே 
நான் எங்களை கிழிக்கிறாய்

கல்லூரி தாயே கல்லூரி தாயே 
பத்து மாதம் இருந்தோம் பெற்ற தாயின் கர்ப்பத்தில் 
நான்கு ஆண்டு இருந்தோம் கற்ற தாயின் கர்ப்பத்தில்

களைத்து விடாதே எங்களை களைத்து விடாதே

இன்றோடு முடிகிறதா புரியவில்லை
இனி மீண்டும் காண்போமா விடையுமில்லை 
காதல் தான் வந்ததுவா தெரியவில்லை
கண்ணீரை மூடுகிறோம் முடியவில்லை

கல்லூரி நீங்கும் கடைசி நாளில் 
கண்ணில் பொங்குது இரு கண்ணீர்
வாழ்வு கொடுத்த கல்லூரிக்கு
வணக்கம் சொல்லும் ஒரு கண்ணீர் 
மறந்து செய்த காயங்களுக்கு 
மன்னிப்பு கேட்கும் ஒரு கண்ணீர்

உலகத்துக்குள் எத்தனை இதயம் 
என்பதை இங்கே பார்த்தோமே
இதயத்துக்கும் எத்தனை
உலகம் என்பதை இங்கே பார்த்தோமே 
உலகம் பெரியதா இதயம் பெரியதா 
விடை தெரியாமல் விடை பெறுவோமே

கல்லூரி தாயே கல்லூரி தாயே 
பத்து மாதம் இருந்தோம் பெற்ற தாயின் கர்ப்பத்தில் 
நான்கு ஆண்டு இருந்தோம் கற்ற தாயின் கர்ப்பத்தில்

களைத்து விடாதே எங்களை களைத்து விடாதே

விடை பெறுவோமே விடை பெறுவோமே…

Movie: Inidhu Inidhu
Lyrics: Vairamuthu
Music: Mickey J. Meyer

Leave a Reply

Your email address will not be published.