Lyricist Thamarai

கள்ளி அடி கள்ளி பாடல் வரிகள்

கள்ளி அடி கள்ளி எங்கே கண்டாய்
முதலில் என்ன கதைச்சாய் உண்மை எல்லாம் சொல்லு

சிரித்திடும் வாவி கரையோரம் காத்து நான் கிடந்தனன்
பதுங்கி மெல்ல வந்தவன் பகடி பகடி என்ன போங்கடி

முழு நிலவு காயும் நிலவில் மீன்கள் வாடும் தென்னாடு
அங்கே இருந்து இங்கே வாழ வந்த பெண்ணே நீ பாடு

நம்மை அணைக்க ஆளில்லை என்று தனத்தி கிடந்தோம்
நெஞ்சுக்குள்ளே தமிழர் சொந்தம் நாம் எந்நாளும்…

ஓ… நல்லூரின் விதியென்று திரிந்தோமடி
தேரின் பின்னே அலைந்தோமடி

கடலொன்று நடுவிலே இல்லை என்று கொள்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்றுதான் தமிழன் தமிழந்தான்…

புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா

நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்
என்றும் நினைத்தோம் தவறாகதான்
இங்கும் உறவு உள்ளது தமிழர் மனது பெரியது

அட உனக்கென வந்த இடத்தில் மருமகள் ஆகினான்
ஏ…புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே
எந்த கலங்கம் இல்லை என்று ஆகுதே தெருடி வாழ்வாயே

கள்ளி அடி கள்ளி உங்கள் கைகள் இணையும்
அந்த பொழுதில் எங்கள் வாழ்கை விரியும்
மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும்
அந்த கதிரின் சூடராய் எங்கள் விடியல் தெரியும்

கனவுகள் எனது என நினைத்தேன் இன்று நான் அறிந்தனன்
இருளின் கரம் விலகுமே உங்கள் கனவும் நனவாகுமே…

Movie: Nandha
Lyrics: Thamarai
Music: Yuvan Shankar Raja