Movie: Antharangam Oomaiyanathu (1980)
Music: K. J. Joy
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆ…ஆஆ..ஆ.ஆஆ…ஆஆ…ம்ம்ம்…
பெண்: ஆஆ..ஆஆ…ஆ….ஓ…ஓ..ஆஅ..ஆ…
ஆண்: காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே
ஆண்: எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்
பெண்: காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே
பெண்: எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்.. எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்..
ஆண்: ஏங்குதடி எண்ணம் ஏறுதடி உன் மோகம் வாங்குதடி உன் இன்பம் இங்கும் அங்கும் எங்கும்
பெண்: மங்கை மலர் பூவண்ணம் பொங்கும் மது பூக்கிண்ணம் மஞ்சமிடதான் எண்ணும் எண்ணம் என்னும் வண்ணம்
ஆண்: மடியினில் நீராடும் மணவறை போராட்டம் மயங்குது உன்னோடு இளங்கனவு கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட
பெண்: காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே..
பெண்: ஆசை வர என்னோடு ஆடி வர உன்னோடு ஆடும் மலை பூ இன்பம் பொங்கும் அங்கம் எங்கும்
ஆண்: ஆலிலையின் மேல் மின்னும் அந்த நிழல் போல் இன்னும் கோடி சுகம் போல் என்றும் வேண்டும் என்றும் வேண்டும்
பெண்: உறவுகள் ஆரம்பம் உணர்வுகள் ஆனந்தம் உனக்கென நான் காட்டும் புது உலகம் என்னை அணைத்த பின்னாலே இன்பம் தொடர்ந்த பின்னாலே… என்னை அணைத்த பின்னாலே இன்பம் தொடர்ந்த பின்னாலே…
ஆண்: காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே
பெண்: ஆ..ஆ..அ…ஆ.. காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே
ஆண்: எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்
பெண்: எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்.