Lyricist T. Rajendar

காதல் அழிவதில்ல பாடல் வரிகள்

காதல் அழிவதில்ல கடல் அலை போல் ஓய்வதில்ல
காதல் வா என்றால் வருவதில்ல
காதல் போ என்றால் போவதில்ல

நெனச்சா நெனச்சது தான் யாரும் அடிச்சாலும் அழியாது
ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ

காதல் காதல் அது அழிவதில்ல
அலைகள் அலைகள் அது ஓய்வதில்ல

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

ஒரு முறை நெனச்சி விட்டா மறக்கவும் முடியாது
நெருப்பு வெச்சி சுட்டா கூட காதல் நெஞ்சு வேகாது

உயிரே உனக்கது தெரியாதா காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலையே

சொல்லடி சொல்லடி என் காதலியே காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே தாங்கலியே

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெத்தவங்க ஒத்து கொண்டா நீயும் நானும் காதலிச்சோம்
மத்தவங்க ஒப்புதல் தந்தா நீயும் நானும் சந்திச்சோம்

கண்ணும் கண்ணும் பார்த்து கொள்ள
காதலும் தான் மலர்ந்தது
நெஞ்சும் நெஞ்சும் நினைத்து கொள்ள
நேசமும் தான் வளர்ந்தது

அந்தஸ்தையும் பணத்தையும் மட்டும்
பெற்றோர் சிலர் மதிப்பாங்க
அன்பு வச்ச புள்ளைங்க மனச பிரிச்சு வைக்க பார்ப்பாங்க

பத்திரிக்கை அடிச்சாலும் பத்து கைகள் தடுத்தாலும்
நிர்ப்பந்தமே செஞ்சாலும் நிச்சயமே முடிந்தாலும்

அணை போட்ட வெள்ளம் நிக்குமே தட போட்டா உள்ளம் நிக்குமா
தடபோட்டா காதல் உள்ளம் நிக்குமா

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

ஜாதிமத மொழியை எல்லாம் கடந்து தான் காதலடி
சொந்தபந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நிற்பதே காதலடி

பெண்கள் சமயத்தில் பெத்தவங்க ஆட்டி வைக்கும் பொம்மையடி
காதலா் என்னை வெறுப்பதாய் நீ சொல்வதில் இல்லை உண்மையடி

எதிர்ப்புகள் வந்தால் கூட எதிர் நீச்சல் அடிக்கனும்டி
தேசம் விட்டு கடத்துனாலும் துணிந்த காதல் ஜெயிக்குமடி

சட்டம் போட்டு தடுத்தாலும் திட்டம் போட்டு வதைத்தாலும்
ஊர் கூடி எதிர்த்தாலும் உடம்பு இரண்டா பிரிச்சாலும்

உதடு வேணா மாறி பேசும் உள்ளம் மட்டும் மாறாது
காதல் உள்ளம் மட்டும் மாறாது

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

ஒரு முறை நெனச்சி விட்டா மறக்கவும் முடியாது
நெருப்பு வெச்சி சுட்டா கூட காதல் நெஞ்சு வேகாது

உயிரே உனக்கது தெரியாதா காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலையே

சொல்லடி சொல்லடி என் காதலியே காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே தாங்கலியே…

Movie: Kadhal Azhivathillai
Lyrics: T. Rajendar
Music: T. Rajendar