Desam cover

Movie: Desam (2002)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Madhushree

Added Date: Feb 11, 2022

பெண்: காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா ஹோய்

பெண்: கண் விரலால் கண் விரலால் பெண் உயிரை மீட்டுரியா பூ முடிக்கும் மோகத்திலே நீ வரியா ஹோய்

பெண்: நானா உன்னை நினைத்தேன் நெடுநாள் விலகி இருந்தேன் தானாய் என்னை இழந்தேன் தடுக்கி உன் மேல் விழுந்தேன் மயிலின் இறகால் மனதை நீவிரியா நீ வரியா ஹோய்

பெண்: காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா ஹோய்

பெண்: ………..

பெண்: உன் பெயரை எந்த நாளிலும் உள்ளத்தில் எழுதவில்லையே இணை ஒரு வார்த்தைதான் கேட்காமலே ஹோய்

பெண்: என் ஜீவன் உன்னை சேர்ந்ததோ என்னுள்ளே என்ன நேர்ந்ததோ உதட்டினில் நாளெல்லாம் உன் பாடலே

பெண்: காதல் வரும் தேதி கிழமை எதுவென எவர்க்கும் காலண்டர் காட்டாதே .. அதுவாக வேர்விட அன்பை நீ நீர் விடு பூ பூவாய் பூக்கும் வண்ணம் பேரின்பம் உண்டாச்சோ பெண்பாவை உனது ஆச்சோ

பெண்: காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா ஹோய்

பெண்: ………..

பெண்: வானம் முதல் முறை மழை வார்க்கும் நிலம் என நெஞ்சில் ஒரு சீதனம் காரணம் நீ தான் நண்பனே

பெண்: யாரை முதல் முறை விரல் மீட்டும் சுகம் என நெஞ்சில் ஒரு வாகனம் காரணம் நீ தான் அன்பனே

பெண்: மங்கை அல்ல மல்லிகை பூவிது உனை அன்றி வேறு கைகள் தொடலாமா

பெண்: மழை கூந்தல் ஏன் வளர்த்தேன் பூ முடிக்க நான் வளர்த்தேன் மாலையிட்டு பூ முடிக்கும் மணநாள் தான் வருமா. மணநாள் தான் வருமா..

பெண்: காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா ஹோய் .