Ra. Ravishankar

காற்றுக்கு தூதுவிட்டு பாடல் வரிகள்

காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை

காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

துள்ளி துளி ஓடலாம் மான்களாக ஆகலாம்
பூவனங்கள் போகலாமா
முள்ளில்லாத பூக்களில் சுற்றுலாக்கள் போகவே
வண்டு போல மாறலாமா

கோடை காலம் தீர்ந்தாச்சு சொகம்
ஓடி போயாச்சு சொந்தங்கள் புதுசாச்சு

காட்டு மூங்கில் குழளாச்சு காற்றும் கூட சேர்ந்தாச்சு
கற்பனை நிஜமாச்சு

ஒளிந்திருந்த புன்னகை இன்று ஒவ்வொரு நிமிஷமும் வெளியாச்சு
முகம் மறைத்த மேகங்கள் விலகி முழுமதி வெளியே வந்தாச்சு

காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

வெண்புறாக்கள் கூட்டமே எங்களோடு கூட்டணி
சேர்ந்துக்கொள்ள வேண்டுகின்றதே
வெட்டுகின்ற மின்னலோ சற்று நேரம் நின்றதே
கையெழுத்து வாங்கி சென்றதே

பூமியெங்கும் வலைவீசு நம்மை போலே ஆளேது
நினைத்தால் இனிக்கிறது
சொந்தமாக ஒரு வீடு நிலவில் வாங்கு என்னோடு
சிறகுகள் முளைக்கவிடு

இமை இருக்கிற துணையில் தானே விழிகள் இங்கே இருக்கிறது
நிலமிருக்கிற துணையில் தானே வேர்கள் இங்கே வளர்கிறது

காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை…

Movie: Unnidathil Ennai Koduthen
Lyrics: Ra. Ravishankar
Music: S. A. Rajkumar