Lyricist Vaali

ஜம்புலிங்கமே ஜடா தரா பாடல் வரிகள்

ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா

காலனை உதைத்த என்னப்பனே – உன்னை
காலால் உதைத்தான் கண்ணப்பனே… ஏ..ஏ… மகாதேவா
காலனை உதைத்த என்னப்பனே – உன்னை
காலால் உதைத்தான் கண்ணப்பனே

அதே அதே சபாபதே அதே அதே சபாபதே

பாம்பை அடிக்கும் ஆண்டவனே.. (அடேய்)
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே

அதே அதே சபாபதே அதே அதே சபாபதே

சைவப்பொருளாய் இருப்பவனே…. ஏ..ஏ…
சைவப்பொருளாய் இருப்பவனே
அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
பிள்ளைக்கறியை கேட்டவனே…

அதே அதே சபாபதே அதே அதே சபாபதே

காட்சி பொருளாய் நின்றவனே
அன்று சாட்சியை சொல்ல வந்தவனே

அதே அதே சபாபதே அதே அதே சபாபதே

ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோகரா…

மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே..ஏ..ஏ..
மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே

மல கசாயத்தை குடித்தவனே….
மகா விஷத்தை குடித்தவனே
தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
நானும் கூட உன்பிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை

ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா

ஹர ஹர சிவ சிவ அரோகரா..

ஹர ஹர சிவ சிவ அரோகரா..

ஹர ஹர சிவ சிவ அரோகரா..

ஹர ஹர சிவ சிவ அரோகரா..

ஹர ஹர சிவ சிவ அரோகரா..

ஹர ஹர சிவ சிவ அரோகரா..

Movie: Kasethan Kadavulada
Lyrics: Vaali
Music: M. S. Viswanathan