Innum Sila Naatkalil Song Lyrics

Movie: Vellai Pookkal (2019)
Music: Ramgopal Krishnaraju
Lyricists: Madhan Karky
Singers: Sarath Santhosh, Jothi Lingam, Pratap,
Deepika Parthasarathy and Kiran Sravan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ராம்கோபால் கிருஷ்ணராஜு

ஆண்: Yeah I’m in the evergreen state Not try na hate But i need a break today

ஆண்: {தமிழ்நாடு I got too used to it CNN wanna watch Sun news a bit} (2)

ஆண்: இன்னும் சில நாட்களில் இந்த முகங்கள் பழகிவிடும் இன்னும் சில நாட்களில் இந்த சாலைகள் விளங்கிவிடும்

குழு: இதற்கு முன்னே… உணரா உணவுகள்
ஆண்: என் நாவுக்கு பிடித்துவிடும்
குழு: அந்நியன்…
ஆண்: என்ற முகமுடி நாளை என் முகம் விட்டு கழன்றுவிடும்

குழு: இன்னும் சில நாட்களில் இந்த முகங்கள் பழகிவிடும் இன்னும் சில நாட்களில் இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண்: In a new place I’m really feeling trapped Missing old things and I’m really need it back

ஆண்: Anna tower to space needle That’s a real quick change And I’ve seen it fast

ஆண்: சாலை ஓர தேநீர் கடையும் மாலை நேர நண்பர் படையும் வாகன நெரிசல் ஹார்ன் ஒலிகள் வெட்கம் கொள்ளும் காதல் கிளிகள்

ஆண்: சுவரொட்டி எங்கும் தலைவர் படம் மெட்ரோ லாரி பின் நெகிழி குடம்

ஆண்: சுவரொட்டி எங்கும் தலைவர் படம் மெட்ரோ லாரி பின் நெகிழி குடம்

ஆண்: எதுவும் இங்கே இல்லை ஆனால் அதுதான் தொல்லை ஆண்கள்: எல்லாம் பழகிவிடும்!

குழு: இன்னும் சில நாட்களில் இந்த முகங்கள் பழகிவிடும் இன்னும் சில நாட்களில் இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண்: My life is a movie I’m the writer producer Director and the main actor And that’s plain facts bro What’s natural Something that can’t be changed I see no point going against the grain

ஆண்: தூசி இல்லா காற்றை நாசி ஏற்றுக்கொள்ளும் பாசம் இல்லா சொற்கள் செவியும் ஏற்றுக்கொள்ளும்

குழு: தூசி இல்லா காற்றை நாசி ஏற்றுக்கொள்ளும் பாசம் இல்லா சொற்கள் செவியும் ஏற்றுக்கொள்ளும்

ஆண்: தினத்தந்தி படிக்கா காலை கிசுகிசு இல்லா வேலை ஆண்கள்: எல்லாம் பழகிவிடும்

குழு: இன்னும் சில நாட்களில் இந்த முகங்கள் பழகிவிடும் இன்னும் சில நாட்களில் இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண்: கடவுளும் மதமும் வேறு வேண்டுதல் எங்கும் ஒன்றே காசின் மதிப்பு வேறு ஆசை எங்கும் ஒன்றே

ஆண்: மொழிகள் வேறு மனிதர் ஒன்றே நிறங்கள் வேறு காதல் ஒன்றே

ஆண்கள்: புது ஒரு வேடம் தானா புது ஒரு நானாய் நானா எல்லாம் பழகிவிடும்

ஆண்: இன்னும் சில நாட்களில் இந்த முகங்கள் பழகிவிடும் இன்னும் சில நாட்களில் இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண்: இதற்கு முன்னே உணரா உணவுகள் என் நாவுக்கு பிடித்துவிடும் அந்நியன் என்ற முகமுடி நாளை என் முகம் விட்டு கழன்றுவிடும்

ஆண்: இன்னும் சில நாட்களில் இந்த முகங்கள் பழகிவிடும் இன்னும் சில நாட்களில் இந்த சாலைகள் விளங்கிவிடும்