Movie: Chithi (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: A. L. Raghavan and Mothi
Added Date: Feb 11, 2022
ஆண்: இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா.. ஆஅ…ஆஅ…ஆ..ஆ…ஹா…ஆ…ஆ…ஆ..ஆ..
ஆண்: இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா ஆஹா உருவம் ஆனதடா ஒஹோ ஹோ உருவம் ஆனதடா ஆ…ஆ…ஆ… அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா
பெண்
குழு: ஆஹா உருவம் ஆனதடா ஓஹோ உருவம் ஆனதடா
ஆண்: ஆ…ஆ..ஆ…ஆ..ஆ…ஆஅ… இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா
அனைவரும்: அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா
ஆண்: ஆசையிலே காக்கையடா அலைவதிலே கழுதையடா காசில்லாத வேளையிலே கடவுளுக்கே பூசையடா
ஆண்: ஆ…ஆ…ஆ..ஆ…ஆ…ஆஅ.. தந்திரத்தில் நரிகளடா தன்னலத்தில் புலிகளடா அந்தரத்தில் நிற்கையிலே மந்திரத்தில் ஆசையடா
ஆண்: ஆ…ஆ…ஆ..ஆ…ஆ…ஆஅ.. ஹா..ஆ..ஆ..ஆ..ஆஅ இங்கே கூட்டமாக வாழச் சொன்னால் ஓட்டை சொல்லுமடா
அனைவரும்: எதிலும் ஓட்டை சொல்லுமடா
ஆண்: நாட்டில் வாட்டம் வந்து சேரும் போது கூட்டம் கூடுமடா
அனைவரும்: ஒன்றாய் பாட்டு பாடுமடா
ஆண்: ஆ…ஆ…ஆ..ஆ…ஆ…ஆஅ.. ஹா..ஆ..ஆ..ஆ..ஆஅ இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா
அனைவரும்: அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா
ஆண்: முகத்தில் பாதி வாயிருக்கும் முழ நீளம் நாக்கிருக்கும் முதுகிலே கண்ணிருக்கும் மூளையிலே மண்ணிருக்கும்
ஆண்: ஆ…ஆ…ஆ..ஆ…ஆ…ஆஅ.. ஹா..ஆ..ஆ..ஆ..ஆஅ மனத்திலே பேயிருக்கும் மறையாத நோயிருக்கும் வனத்திலே விட்டு விட்டால் மிருகமெல்லாம் வரவேற்கும் வனத்திலே விடுவதற்கு வால் மட்டும் இல்லையடா. ஹ ஹ ஹ சபாஷ்.
அனைவரும்: இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா