Bommai Kalyanam cover

Movie: Bommai Kalyanam (1958)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: A. M. Rajah and Jikki

Added Date: Feb 11, 2022

ஆண்: இன்பமே…பொங்குமே இன்பமே பொங்குமே
பெண்: ஒன்றானோம் நெஞ்சிலே உறவானோம் அன்பிலே ஒன்றானோம் நெஞ்சிலே உறவானோம் அன்பிலே

இருவர்: எந்நாளும் இல்லறமே இனிதாக செல்லுமே இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே

ஆண்: {உன் கண்களெனும் வெண்ணிலா காதல் ஜோதி வீசுதே கன்னல் மொழி மௌனமாய் பேசுதே} (2)

பெண்: உலகமெனும் கடலிலே ஒற்றுமை படகிலே உலகமெனும் கடலிலே ஒற்றுமை படகிலே உலவியே மகிழலாம் பிரியாமல் வாழ்விலே உலவியே மகிழலாம் பிரியாமல் வாழ்விலே

இருவர்: எந்நாளும் இல்லறமே இனிதாக செல்லுமே இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே

ஆண்: மணம் வீசும் சோலையிலே வளர் காதல் பூங்குயிலே ஆஅ..ஆஅ…ஆ..ஆஅ…ஆ…ஆ.. மணம் வீசும் சோலையிலே வளர் காதல் பூங்குயிலே

பெண்: மனம் போலே நாம் இணைந்தோம் மதுர கானம் பாடலாம் மனம் போலே நாம் இணைந்தோம் மதுர கானம் பாடலாம்

இருவர்: எந்நாளும் இல்லறமே இனிதாக செல்லுமே இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே

ஆண்: {அசைந்தாடும் பூங்கொடி நீயே
பெண்: அலை மோதும் கொடி படரும் மாந்தரு நீயே} (2)

ஆண்: {இசை பாடும் தென்றலே..
பெண்: எனதாசை அன்பரே} (2)

இருவர்: இன்றுபோல் என்றுமே கொஞ்சி பேசி மகிழலாம் இன்றுபோல் என்றுமே கொஞ்சி பேசி மகிழலாம்

இருவர்: எந்நாளும் இல்லறமே இனிதாக செல்லுமே இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே