Movie: Anbulla Rajinikanth (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Vani Jayaram
Added Date: Feb 11, 2022
பெண்: இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு: கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா

பெண்: காட்டு புறத்திலே கொட மழை பேஞ்சுதாம்
குழு: ஹை..
பெண்: கொட மழையிலே காட்டு யானை நனஞ்சுதாம் யான நனன்சதும் ஹசுக்குனு தான் தும்பிசாம் தும்மி முடிச்சதும் தும்பிக்கையும் பிஞ்சிதாம்
பெண்: கத கதையா நானும் சொல்லட்டுமா
குழு: ஹோய் ஹோய்
பெண்: கடு கடுத்த நெஞ்ச கிள்ளட்டுமா
குழு: ஹோய் ஹோய்
பெண்: கண்ணாக நீ இருந்தா கண் இமையா நான் இருப்பேன் கடலாக நீ இருந்தா கரை இரண்டா நான் இருப்பேன் உன் முகத்தில் துயரம் என்ன கண்மணியே கொஞ்சம் சிரி
பெண்: இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு: கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு: …………..
பெண்: ஏரி கரையிலே நார ஒன்னு நின்னுச்சாம் எம்பி குதிக்கிற மீனா புடிச்சு தின்னுச்சாம் தின்னு முடிச்சதும் கொறட்ட விட்டு தூங்கிச்சாம் விட்ட கொறட்டையிலே மீனு வெளியே வந்துச்சாம்
பெண்: தண்ணியிலே தாவி குதிச்சிடுச்சாம்
குழு: ஹோய் ஹோய்
பெண்: நாரைய பார்த்து சிரிசிடுச்சாம்
குழு: ஹே ஹே
பெண்: அம்மாடி நீ நெனச்சா எப்போதுமே சிரிச்சிடலாம் பொல்லாத துன்பத்திலும் மீனாட்டம் குதிச்சிடலாம் சித்திரமே ரத்தினமே முத்தினமே கொஞ்சம் சிரி
பெண்: இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு: கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா லலலா லலலா லலலா லலலா…….