Lyricist Palani Bharathi

இது சங்கீத திருநாளோ பாடல் வரிகள்

இது சங்கீத திருநாளோ புது சந்தோஷம் வரும் நாளோ 
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள் 
முத்த மழை  கன்னம் விழ நனைந்தாளே 
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே

இது சங்கீத திருநாளோ புது சந்தோஷம்  வரும் நாளோ 
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ சிறு பூவாக மலர்ந்தாளோ

கைகளில் பொம்மைகள்  கொண்டு ஆடுவாள் 
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள் 
அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்

பூவெல்லாம் இவள் போல அழகில்லை 
பூங்காற்று இவள் போல சுகமில்லை 
இது போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை

இது சங்கீத திருநாளோ புது சந்தோஷம் வரும் நாளோ 
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ.. சிறு பூவாக மலர்ந்தாளோ

நடக்கும் நடையில் ஒரு தேர்வண்ணம் 
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம் 
கண்ணில் மின்னும் ஒரு காவியம்

மனதில் வரைந்து வைத்த ஓவியம் 
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம் 
என்றும் எங்கும் இவள் ஞாபகம்

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்

இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன் 
எப்போதும் தாலாட்டுவேன்

இது சங்கீத திருநாளோ புது சந்தோஷம் வரும் நாளோ 
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள் 
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே

இது சங்கீத திருநாளோ புது சந்தோஷம் வரும் நாளோ 
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ சிறு பூவாக மலர்ந்தாளோ…

Movie: Kadhalukku Mariyadhai
Lyrics: Pazhani Bharathi
Music: Ilaiyaraaja

Leave a Reply