Lyricist Vaali

ஹலோ மிஸ் இம்சையே பாடல் வரிகள்

ஹலோ மிஸ் இம்சையே ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே

அங்கிட்டுக் கொஞ்சம் இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும் பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா
அம்மான் மகளே அம்மான் மகளே
அன்பாய் அழகாய் வீசும் புயலே
அம்மான் மகளே அம்மான் மகளே
என்னை அசத்தும் ஆழ்வார் குழலே

அன்புக்கு நீங்கள்தான் அஸ்திவாரம்
வம்புக்கும் நீங்கள்தான் அடிவாரம்
நட்பென்று சுற்றுவீர் முதல்வாரம்
சட்டென்று பார்வைகள் இடம் மாறும்

அழகான அலர்ஜி நீங்கள் ஆனாலும் Energy நீங்கள்
Time என்ன கேட்டால் வழியுற மனமே
ஒருமுறை பார்த்தால் அலையுற தினமே

Hello Miss இம்சையே ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே

கண்களால் முதலில் புன்னகைப்போம்
பின்புதான் கண்களில் மழை வடிப்போம்
உங்களை நம்பித்தான் கையை பிடிப்போம்

அய்யய்யோ தப்பென்று கண்கள் துடைப்போம்
உதட்டோடு உதட்டுச்சாயம் ஆண்நெஞ்சில் ஆறாக்காயம்
கொஞ்சலும் ஏனோ கெஞ்சலும் ஏனோ
நீயோ நானோ மிஞ்சலும் நோ நோ

Hello Miss இம்சையே ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே

அங்கிட்டுக் கொஞ்சம் இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும் பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா

அம்மான் மகளே அம்மான் மகளே
அன்பாய் அழகாய் வீசும் புயலே
அம்மான் மகளே அம்மான் மகளே
என்னை அசத்தும் ஆழ்வார் குழலே…

Movie: Unnale Unnale
Lyrics: Vaali
Music: Harris Jayaraj