Ezhelu Jenma Bandham Female Song Lyrics

Movie: Therku Theru Machan (1992)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா..

பெண்: ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

பெண்: வெத்திலையில் பாக்கு வச்சு பத்து பேரை சாட்சி வச்சு தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒன்னு உருவாச்சு

பெண்: அஃநிய சாட்சி வச்சு கை விரலை சேத்து வச்சு இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு

பெண்: பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம் பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம் இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை

பெண்: ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

பெண்: சந்தனத்து மழை அடிக்க சந்திரனும் கொடை புடிக்க செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் பிறப்பானே

பெண்: தங்கத்திலே தூளி கட்டி வைரத்திலே மாலை கட்டி தத்தி வரும் பாதத்துக்கு முத்து மணி தொடுப்பேனே

பெண்: துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு நான் தாய் ஆகும் முன்னே உன்னை தாலாட்டுவேனே