Arunodhayam cover

Movie: Arunodhayam (1971)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ. ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார்

பெண்: ஹோ. ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார்…ஹ்ம்ம்..

பெண்: ஹோ. ஹோ எதற்கும் தயார்

பெண்: மது உண்ணும் போதை வண்டு மஞ்சத்தில் புரளுவதென்ன மழை வெள்ளம் போலே எண்ணம் நெஞ்சத்தில் திரளுவதென்ன

பெண்: ஹோ மது உண்ணும் போதை வண்டு மஞ்சத்தில் புரளுவதென்ன மழை வெள்ளம் போலே எண்ணம் நெஞ்சத்தில் திரளுவதென்ன அணைப்பதில் விருப்பமா அதற்கொரு விளக்கமா ரசிப்பதில் வெட்கம் என்ன வேண்டுமா

பெண்: ஹோ…ஹோ எதற்கும் தயார்

பெண்: முகவெட்டு பார்த்த பின்பு முத்துக்கள் தோற்றதுண்டு இடை வெட்டு ஆடை கண்டு இளவட்டம் மயங்கியதுண்டு

பெண்: லலலல… ஹோ முகவெட்டு பார்த்த பின்பு முத்துக்கள் தோற்றதுண்டு இடை வெட்டு ஆடை கண்டு இளவட்டம் மயங்கியதுண்டு புதுக் கலை காட்டுவேன் முகத் திரை நீக்குவேன் உனக்கெது தேவை என்று கூறலாம்

பெண்: ஹோ. ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார்

பெண்: ஹோ. ஹோ எதற்கும் தயார் எதற்கும் தயார்….எதற்கும் தயார்