என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே பாடல் வரிகள்
என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே
காணாத துயரம் கண்ணிலே ஓயாத சலனம் நெஞ்சிலே
இறைவா சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால் கரை சேர்க்கிறாய்
வாழ்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
உனது அரசாங்கம் பெரும் காடு உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்து கொண்டு உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
இறைவா சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால் கரை சேர்க்கிறாய்…
Movie: Mayakkam Enna
Lyrics: Selvaraghavan
Music: G. V. Prakash Kumar