என்ன புள்ள செஞ்ச நீ பாடல் வரிகள்

என்ன புள்ள செஞ்ச நீ.. ஹோய் பாவி பய நெஞ்ச நீ..
என்ன புள்ள செஞ்ச நீ.. ஹோய் பாவி பய நெஞ்ச நீ..

பாக்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் றெக்க வச்ச
திக்க வச்ச தெனர வச்ச திசைய தான் உணர வச்ச

தெக்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச
என்ன புள்ள செஞ்ச நீ.. ஹோய் பாவி பய நெஞ்ச நீ..

கொள்ளகாரன் நானே கொள்ளையாகி போனேன்
ஹே மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே..
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம..

தண்ணீரில் உண்டாகும் மீன்கள்
ஹே தண்ணீரில் வேகின்ற மாயம்

உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு
ஹே உன்னாலே ஏன் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள செஞ்ச நீ … பாவி பய நெஞ்ச நீ

ஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை
ஹே செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாத மண்ண பிசைஞ்சே பான போல வனைஞ்சேன்

ஹே என்ன நீயே என்னிடமே மாத்தி தந்தாயே
எப்போதும் உன் பேரை சொல்லி
என் உள் நாக்கும் தாண்டோர போடும்
உப்பாத்தில் மீனாக தானே ஹே அப்போது உன் பிம்பம் ஆடும்

என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ

பாக்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் றெக்க வச்ச
திக்க வச்ச தெனர வச்ச திசைய தான் உணர வச்ச
தெக்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச…

Movie: Raman Thediya Seethai
Lyrics: Jayantha
Music: Vidyasagar