Lyricist Thamarai

என்னை சாய்த்தாளே பாடல் வரிகள்

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான் வெளியேற தான் பார்த்தேன்

நடக்கிற வரை நகர்கிற தரை அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை அதனால் திகைக்கிறேன்

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்

தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும் பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசை கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ நான் எல்லை தாண்டி செல்ல கண்டேன்

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக

மாலை வந்தால் போதும் ஒரு நூற்று பத்தில் தேகம்
செங்காந்தள் போல் காயும்

காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்

தவிப்பதை மறைக்கிறேன் என் பொய்யைப் பூட்டி வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன் என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான் வெளியேற தான் பார்த்தேன்

நடக்கிற வரை நகர்கிற தரை அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை அதனால் திகைக்கிறேன்…

Movie: Endrendrum Punnagai
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj