Lyricist Na. Muthukumar

எங்கே போவேனோ பாடல் வரிகள்

எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என் இதயத்தை வாங்கிவிட்டாய்

எங்கே போவேனோ என் கண்ணை கீறிவிட்டாய் 
எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்

கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்
என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி

எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்

தெய்வங்கள் இங்கே இல்லை இருந்தாலும் இரக்கம் இல்லை 
கழுத்தோடு கல்லை கட்டி கடலோடு போட்டாள் என்னை

மரணத்தை தானா இந்த காதலும் கேட்குது
பொய் வேஷமே உள்ளதே  எங்கும் 
இல்லாமை தானா இங்கு காதலை மாய்ப்பது 
என் சூழ்நிலை கொல்லுதே

எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்…

Movie: Angadi Theru
Lyrics: Na. Muthu Kumar 
Music: Vijay Antony

Leave a Reply