Lyricist Yegathasi

எங்க போற மகனே நீ பாடல் வரிகள்

எங்க போற மகனே நீ எங்க போற மகனே 
ஊரவிட்டு போற தாய் வேர விட்டு போற 
சண்டாள சணமே விட்டு போறாது உன் இனமே 
இருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை

சிரிப்பை மறந்தாய் சின்னதாக இறந்தாய் 
உனக்கு மருந்தாய் இருக்கிறாள் ஒரு தாய் 
குத்தி வச்ச அரிசி தான் உலையில கிடக்குது 
பெத்து போட்ட வயிறுதான் பத்தி கிட்டு எரியுது

எங்க போற மகனே நீ எங்க போற மகனே 
ஊரவிட்டு போற தாய் வேர விட்டு போற 
சண்டாள சணமே விட்டு போறாது உன் இனமே 
இருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை

வெத்தல கொடி ஒன்னு நெருப்புல படர்ந்திரிச்சி
பெத்தவளின் மடி பிரியும் பெருந்துயர் நடந்திரிச்சே
சோறு ஊட்டும் சொந்தம் பந்தம் சூழ்ச்சியாக பேசிரிச்சே
வேர் அறுக்க சாதி சனம் வெட்டருவா வீசிரிச்சே

என்ன இது கணக்கு இடி மட்டும் உனக்கு 
சாதிசனம் எதுக்கு சாமியும் தான் எதுக்கு
வெயிலை சொமந்து வித்து கிட்டு போறதெங்கே 
இருட்ட பாய்போல் சுருட்டி கிட்டு போவதெங்கே

எங்க போற மகனே நீ எங்க போற மகனே 
ஊரவிட்டு போற தாய் வேர விட்டு போற 
சண்டாள சணமே விட்டு போறாது உன் இனமே 
இருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை

வழித்துணை இல்லாம வனவாசம் போவது போல் 
கரை இல்லா நதியாட்டம் கந்தா நீயும் போறதெங்கே

கல் விழுந்த குளம் போல கலங்கிருச்சே உன் பொழப்பு 
பூ விழுந்த கண்ண போல போயிருச்சே உன் பொழப்பு

நெஞ்சுக்குழி ஓரம் பச்ச குத்தி போனேன் 
பச்சைக்கிளி ஒன்னு காத்துகிட்டு கிடக்கு 
செல்லமே செடியே செங்காட்டு சித்திரமே 
முல்லையே கொடியா உப்பரத்து வழி நீயே

எங்க போற மகனே நீ எங்க போற மகனே 
ஊர விட்டு போற தாய் வேர விட்டு போற 
சண்டாள சணமே விட்டு போறாது
உன் இனமே  இருக்குது எட்டு திசை நீ 
போறது எந்த திசை….

Movie: Madha Yaanai Koottam
Lyrics: Yegathasi
Music: N. R. Raghunanthan

Leave a Reply