Lyricist Na. Muthukumar

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே பாடல் வரிகள்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது பூக்களா மனது வளர்த்த
சோலையில் காதல் பூக்கள் உதிருமா

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப்
பிடிக்குமே காதல் நோய்க்கு
மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ

நீர்த்துளி நீங்கினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…

Movie: Julie Ganapathi
Lyrics: Na. Muthukumar
Music: Ilaiyaraaja