Lyricist Yugabharathi

எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள்

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே 
வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்

இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை 
இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை

உன்னை காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம் 
கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம் 
சிறு பாா்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே
நூறு கோடி வானவில்

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்
ஆ… ஆ…. லா…. லலலலலா…… லலலலலா…… லலலலலா…… லலலலலா……

மரம் இருந்தால் அங்கே என்னை நான் நிழலென நிறுத்திடுவேன்
இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்

இனி மேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே 
நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்…

Movie: Bheemaa
Lyrics: Yugabharathi
Music: Harris Jayaraj

Leave a Reply

Your email address will not be published.