Lyricist Kannadasan

என்னருகே நீ இருந்தால் பாடல் வரிகள்

என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

ஆ….ஆ…ஆ….ஆ….ஆ….ஆ….ஆஅ….ஆ…

கை அணைந்த வேளையிலே கண்ணிரெண்டும் மயங்குவதேன்

மின்சாரம் பாய்ந்ததுபோல் மேனியெல்லாம் நடுங்குவதேன்
மின்சாரம் பாய்ந்ததுபோல் மேனியெல்லாம் நடுங்குவதேன்

என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

வஞ்சி இடை கெஞ்சுவதேன் பிஞ்சு மொழி கொஞ்சுவதேன்

கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே
கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே

என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும்

முழுமைப் பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும்
முழுமைப் பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும்

என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆஅ…
ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

Movie: Thirudathe
Lyrics: Kannadasan
Music: S. M. Subbaiah Naidu