Lyricist Yugabharathi

எள்ளு வய பூக்கலையே  பாடல் வரிகள்

எள்ளு வய பூக்கலையே.. ஏறெடுத்தும் பாக்கலையே..
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா..
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா..

கொல்லையில வாழ எல.. கொட்டடியில் கோழி குஞ்சு..
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா..
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா..

காத்தோட உன் வாசம்.. காடெல்லாம் ஒம் பாசம்..
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா..
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா..
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா..

கல்லாக நின்னாயோ.. கால் நோக நின்னாயோ..
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு..

மல்லாந்து போனாலும்.. மண்ணோடு சாஞ்சாலும்..
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு..

தலைச்சம் புள்ளை இல்லாம.. சரிஞ்சது எத்தன ஆட்சி..
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு..
தாயோட பாரம் மாசம் பத்தய்யா..
தாங்காம நீயும் போனா தப்பய்யா..

எள்ளு வய பூக்கலையே.. ஏறெடுத்தும் பாக்கலையே..
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா..
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா..

வாள் ஏந்தி வந்தாலும்.. வாழாம செத்தாலும்..
கம்பீரம் கொறைஞ்சிடாத.. நெருப்பு நீ..

அய்யோன்னு போனாலும்.. ஆகாசம் போனாலும்..
தண்ணீர கொளத்தில் சேர்க்கும்.. வரப்பு நீ..

உழைக்க எண்ணுற ஆள.. உதைச்சி தள்ளுற ஊர..
கைய கால வெட்டி வீசும்.. கருப்பு நீ..

காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ..
காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ..

எள்ளு வய பூக்கலையே.. ஏறெடுத்தும் பாக்கலையே..
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா..
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா..

கொல்லையில வாழ எல.. கொட்டடியில் கோழி குஞ்சு..
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா..
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா..

காத்தோட உன் வாசம்.. காடெல்லாம் ஒம் பாசம்..
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா..
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா..
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா..

Movie: Asuran
Lyrics: Yugabharathi
Music: G. V. Prakash Kumar