Movie: Azhagarsamy (1999)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: Hariharan
Added Date: Feb 11, 2022
ஆண்: ஈரஞ்சு மாசம் சுமந்தவளே சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ.
ஆண்: ஈரஞ்சு மாசம் சுமந்தவளே சீராட்டி தொட்டிலிட மறந்தவளே
ஆண்: அடி உன்னை தேடும் பிள்ளை தாய்ப்பாலை பார்த்ததில்லை அடி உன்னை தேடும் பிள்ளை தாய்ப்பாலை பார்த்ததில்லை உன் பார்வை பட்டால் சோகமெல்லாம் ஓடிப் போகாதா
குழு: வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
ஆண்: ஈரஞ்சு மாசம் சுமந்தவளே சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ.
ஆண்: அம்மா அம்மா என்று அழுததை நீதான் கேக்கலையே தத்தி தத்தி நானும் தவழ்ந்ததை நீதான் பாக்கலையே தட்டுதடுமாறி விழுந்ததும் நீதான் தூக்கலையே திக்கி திக்கி பேசும் மழலையை நீதான் ரசிக்கலையே
ஆண்: ஹே..நான் வளர்ந்த கதையை எல்லாம் பத்திரமா வச்சு இருக்கேன் பக்கம் வந்து கொஞ்சம் கேட்க ஆசையில்லையா என் தாயே சொல்லு சொல்லு நான் உன் பிள்ளை இல்லையா
குழு: வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
ஆண்: நான் அழுத நேரம் நிலவாய் இருந்ததும் நீதானா நானுறங்கும் நேரம் தரையாய் இருந்ததும் நீதானா பசியெடுக்கும் போது உணவாய் இருந்ததும் நீதானா வெய்யில் அடிக்கும் போது நிழலாய் இருந்ததும் நீதானா
ஆண்: தாயே உன்னை பார்க்கத்தானே கண் திறந்து வாழுகின்றேன் உன் முகத்தைப் பார்த்துவிட்டால் கண்ணை மூடுவேன் என் தாயே உந்தன் மடியில் தான் நான் மீண்டும் பிறப்பேன்
குழு: வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
ஆண்: ஈரஞ்சு மாசம் சுமந்தவளே சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ. ஈரஞ்சு மாசம் சுமந்தவளே சீராட்டி தொட்டிலிட மறந்தவளே