Lyricist Vaali

தில் தில் தில் மனதில் பாடல் வரிகள்

தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல்

ஆஹா தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல் ஆஆஆஆஆ

வளர்ந்த நாள் முதல் கார்குழலும் அழைக்குதே உன்னை பூச்சூட
மயக்கம் ஏனடி பூங்குயிலே தவிக்கிறேன் அடி நான் கூட
விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்

கைகள் படாத இடம் தான் இப்போது
ஆசை விடாத சுகம் தான் அப்போது
ஏக்கம் ஏதோ கேட்கும் ம்ம்ம்ம்ம்
தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல் ஆஆஆஆஆ
தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல்

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே உனக்கு நான் சிறு தூறல்தான்
வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க உனக்கு நான் மலைச்சாரல்தான்
அடுத்த கட்டம் நடப்பதெப்போ எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ

மாலை இடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது
போதும் போதும் ஊடல் ஆஆஆஆஆ

தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்…

Movie: Mella Thirandhathu Kadhavu
Lyrics: Vaali
Music: M. S. Viswanathan