Azhagu cover

Movie: Azhagu (1984)
Music: G. K. Venkatesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேடி…வந்தாள் தேவன் சன்னிதி

ஆண்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேடி வந்தாள் தேவன் சன்னிதி தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட

பெண்: ஏகாந்த வேலை ஒன்று எதிர்பார்த்து ஏங்கி நின்று பாதாதி கேசம் இன்று பரிமாற ஓடி வந்தாள்

ஆண்: திருக்கோயில் வாசல் இன்று திறக்கின்ற நேரம் என்று ஆரம்பமாகும் ஆராதனை

பெண்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட.

ஆண்: பசியாற வேண்டுமென்றால் பதமான வாழை உண்டு இளவேனில் கோடையென்றால் இளநீரை கேட்பதுண்டு

பெண்: யார் கொண்ட தாகம் இன்று யார் தீர்க்கக்கூடும் என்று அன்பே உன் உள்ளம் அறியாததோ..

பெண்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
ஆண்: தேடி…வந்தாள் தேவன் சன்னிதி

இருவர்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட..