Avar Enakke Sontham cover

Movie: Avar Enakke Sontham (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Poorani and Indhira

Added Date: Feb 11, 2022

பெண் 1: தேவன் திருச்சபை மலர்களே. பெண் 2: லல்லாலல லலலல பெண் 1: வேதம் ஒலிக்கின்ற மணிகளே.. பெண் 2: லல்லாலல லலலல

பெண் 1: தேவன் திருச்சபை மலர்களே. வேதம் ஒலிக்கின்ற மணிகளே.. போடுங்கள் ஓர்..புன்னகைக்கோலம். பாடுங்கள் ஓர்.இன்னிசை ராகம்

பெண் 1: {விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்.. பொன்மானை உன் நடையினில் காண்கிறேன்..} (2)

பெண் 1: எங்கள் அன்னை மேரியின் பொங்கும் கருணை மழையிலே என் செல்வமே என் தெய்வமே பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே..

பெண்கள்: தேவன் திருச்சபை மலர்களே. வேதம் ஒலிக்கின்ற மணிகளே.. போடுங்கள் ஓர்.. புன்னகைக்கோலம். பாடுங்கள் ஓர். இன்னிசை ராகம்

விசில்: ………..

பெண் 1: கண்ணே மணியே பொன்னெழில் மலர்களே.. அன்பே அமுதே அருந்தவப் பயன்களே..

பெண் 2: கொஞ்சும் மழலை மொழியிலே உள்ளம் மயங்க மயங்கவே பொன்வண்டு போல் சில்வண்டு போல் கவிப் பாடுங்கள் உலகம் மகிழவே..

பெண்கள்: தேவன் திருச்சபை மலர்களே. வேதம் ஒலிக்கின்ற மணிகளே.. போடுங்கள் ஓர்..புன்னகைக்கோலம். பாடுங்கள் ஓர்.இன்னிசை ராகம் .