காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம் பாடல் வரிகள்
ஷக்தி வேலு பாட்டை போடு துள்ளி வந்து ஆட்டம் போடு
ரொம்ப ஹாட்-ஹா அட்ரா பீட்
எல்லாம் சேர்த்து உட்ரா ஜூட்
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா
மயில் ஏறி போயி நீ வள்ளியதான் பார்த்த
சைக்கிள் ஏறி தேடி வந்தோம் உன்னை தானே நாங்க
பூமியத்தான் சுத்தி நீ ஞான பழம் கேட்ட
படிச்சு படிச்சு கிழிச்சு போட்ட ஞான பழம் நாங்க நாங்க
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா
நெஞ்சு படக்கு படக்கு பட எம்மா தினுசு தினுசு தின
தினம் ஜலக் ஜலக் ஜல ஏலே சல் சல் சல் சல்
புஸ்தக மூட்டை தூக்கி தான்
ஸ்கூலுல நாங்க அலைஞ்சோமே
ஒத்த நோட்டுல பாடம் முடிப்போம்
பல முறை லீவ் லெட்டரருல
பாட்டிய நாங்க கொன்னோமே
விடுமுறையே இனி தேவை இல்ல
யூனிபார்ம் போடும் தொல்லை இல்ல
சொத்து மூட்டை தூக்க தேவையில்ல
அடங்கொக்கா…அட மக்கா
உப்பு கடலை வாங்கி தின்போம்
தப்பா கடலை போட மாட்டோம்
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா
காளை மாடு கரந்தாலும் குதிரையும் முட்டை போட்டாலும்
கெட்ட பேரை நாங்க எடுக்க மாட்டோம்
கணக்கு மாஸ்டர் கவுத்தாலும்
நூத்துக்கு முட்டை போட்டாலும்
கோழின்னு நாங்க திட்டவே மாட்டோம்
தமிழ் ஐயா வந்து பாடம் சொன்னால்
இலக்கணம் நாங்க மீறமாட்டோம்
அடங்கொய்யா ஐயோ படக்கு படக்கு பட அடங்கையா
எம்மா தினுசு தினுசு தின நாகர்கோவில் ஜில்லாவுள
நாங்க ரொம்ப நல்ல பிள்ளை
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா
மயில் ஏறி போயி நீ வள்ளியதான் பார்த்த
சைக்கிள் ஏறி தேடி வந்தோம் உன்னை தானே நாங்க
பூமியத்தான் சுத்தி நீ ஞான பழம் கேட்ட
படிச்சு படிச்சு கிழிச்சு போட்ட ஞான பழம் நாங்க நாங்க…
Movie: Kovil
Lyrics: Na. Muthukumar
Music: Harris Jayaraj