Lyricist Snehan

சின்ன வயசில பாடல் வரிகள்

சின்ன வயசில ஓடி புடிச்சேன்
நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்
சின்ன வயசுல ஓடி புடிச்சேன்
நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்

கட்டாந்தரை எல்லாம் கண்கள் சிமிட்டுதே
பட்ட மரம் கூட பாா்த்து சிரிக்குதே
பழைய நெனவு திரும்புதே பாவம் மனசு ஏங்குதே

மண்ணு மணக்குதே நெஞ்சு வரைக்கும்
கண்ணு கலங்குதே கள்ளி செடிக்கும்
கொடுக்கா புளி மரமும் கொத்து கொத்தா காய்ச்சிருக்கு

காது குத்தி கறி சமைச்ச நாளும் நெனவிருக்கு
மீண்டும் இளமை திரும்புமா உதிர்ந்த உறவு பூக்குமா

நடந்து பழகிய வீதி வெளி எல்லாம்
காதோடு கை குலுக்கி நலம் கேக்குதே
வெளஞ்ச நிலம் எல்லாம் வயச மறந்து தான்
பழசை மறக்காமல் தலை ஆட்டுதே

மழைக்கு குடை புடிச்ச மாமரமும் காணலையே
வழுக்கும் வரப்பில் எல்லாம் ஓடி பாக்க திறம் இல்லையே

காலம் கேள்வி கேக்குதே கண்ணீர் கண்ணை மறைக்குதே
காலம் கேள்வி கேக்குதே கண்ணீர் கண்ணை மறைக்குதே…

Movie: Pandavar Bhoomi
Lyrics: Snehan
Music: Bharadwaj