Chinna Kuyil Paaduthu cover

Movie: Chinna Kuyil Paaduthu (1987)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது

ஆண்: {சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது} (2)

ஆண்: என்ன செய்யும் இந்தக் குயில் கண்ணம்மா பாவமடி சின்னக் குயில் அம்மம்மா.

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது

ஆண்: அன்னைக் குயில் தன்னை இந்த பிள்ளைக் குயில் பார்க்கலே பிள்ளைக் குயில் ஏக்கம் தன்னை தந்தைக் குயில் தீர்க்கலே

ஆண்: சின்னக்குயில் தாயின் அன்பை தினம் தினம் காணாமே உள்ளத்திலே வாட்டம் கொண்டு உருகுது தூங்காமே

ஆண்: தந்தை உள்ளம் எப்போதும் பூமியிலே…ஏ. பொங்கி வரும் தாய் உள்ளம் ஆகாதே.. எந்தத் துணை ஆனாலும் வாழ்க்கையிலே சொந்தத் துணை தாய் போல கிடையாதே.. தாயைப் போல பேசும் தெய்வம் ஏதும் இல்லே..

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது

ஆண்: பிள்ளைக்குயில் வாழும் கூட்டில் பெத்தக்குயில் வாழ்ந்தது பெத்தக்குயில் கூட்டை விட்டு காட்டுப் பக்கம் பறந்தது

ஆண்: அன்னைக்குயில் கூட்டில் வேறோர் ஆசைக்குயில் வந்தது தந்தைக்குயில் உள்ளம் நோக சண்டை இட்டுப் போனது

ஆண்: ஆதரவு இல்லாத சிறு குயிலும்.ம்ம். வாடுதம்மா நீர் இல்லா வயல் போல தாயின் மடி காணாத பிள்ளைக் குயில்.. சிந்துதம்மா கண்ணீரை நதி போல ஏக்கம் தீரும் நாளும் என்றுதான் வருமோ

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது…

ஆண்: என்ன செய்யும் இந்தக் குயில் கண்ணம்மா பாவமடி சின்னக்குயில் அம்மம்மா.

ஆண்: சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது