Lyricist Vaali

சின்ன சின்ன சேதி பாடல் வரிகள்

சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

மேற்கால வெயில் சாய வாய்க்காலில் வெள்ளம் பாய
மயக்கம் ஒரு கெறக்கம் இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்

சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

மெல்ல மெல்ல தாளம் தட்ட மத்தளமும் சம்மதத்த தருமோ
கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ

அஞ்சு விரல் கோலம் போட அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ
அன்னாடம்தான் ஆசை என்னும் நோய் வருமோ

மொட்டு விரிந்தால் வண்டுதான் முத்தம் போடாதா
முத்தம் விழுந்தால் அம்மம்மா வெட்கம் கூடாதா

கட்டி புடிச்சிருக்க மெட்டு படிச்சிருக்க
எனக்கொரு வரம் கொடு மடியினில் இடம் கொடு

சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

உன்ன விட்டு நான் இருந்தால் அந்தி வரும் சந்திரனும் சுடுமோ
மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ

வெண்ணிலவ தூது விடு வண்ண மயில் உன் அருகில் வருவேன்
பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்

என்னை கொடுப்பேன் கொண்டு போ உந்தன் கையோடு
ஒட்டி இருப்பேன் ஆடை போல் உந்தன் மெய்யோடு

தன்னந்தனிச்சிருக்க உன்னை நினைச்சிருக்க
பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்கிது

சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

மேற்கால வெயில் சாய வாய்க்காலில் வெள்ளம் பாய
மயக்கம் ஒரு கெறக்கம் இந்த வயசுல மனசுல
வந்து வந்து பொறக்கும்

சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்…

Movie: Sendhoorapandi
Lyrics: Vaali
Music: Deva