Bharathi Kannamma cover

Movie: Bharathi Kannamma (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Febi Mani

Added Date: Feb 11, 2022

பெண்: சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா உன்ன எண்ணி பூத்திருக்கா புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை கட்டி வெச்சு காத்திருக்கா

பெண்: தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு நான் சொல்ல தவிப்பு…. என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு

பெண்: சின்ன சின்ன கண்ணம்மா…

பெண்: ஆஅ..ஆ..ஆ…ஆஹ்…ஆ..

பெண்: பல்லு தேய்க்க தெரியாது தேய்ச்சு விட்டதும் நீதான் பாவாடைக்கு நாடாவ கட்டி விட்டதும் நீதான் அங்கங்கே மருதாணி அப்பி விட்டதும் நீதான் நான் ஆளான அந்நேரம் பக்கம் நின்னதும் நீதான்

பெண்: மஞ்ச தண்ணி எதுக்கு நீதான் நீதான் நீயேதான் மாமங்காரன் எதுக்கு நீதான் நீதான் நீயேதான் மாராப்பு செரி செஞ்ச மகராசன் நீயேதான் என் நெத்தியில பொட்டு வெச்ச ஒத்த வெரல் நீதான்.

பெண்: சின்ன சின்ன கண்ணம்மா…

பெண்: என்னைப்போல உன் மேல ஆசை வெச்சவ இல்ல உன்னைப்போல உள்ளூரில் மீசை வெச்சவன் இல்ல அத்தானே உனக்கும்தான் தாலி கட்டப்போறேன் அய்யேழு நாளோடு முழுகாம போறேன்

பெண்: இன்பம் தரவா நீ இரவும் பகலும் நிறைவாக மாதம் ஏழு போக வளவி போட வருவாக கண்ணால நம் மீது கண் வைக்க போறாக உன்ன நானும் பொத்தி வைப்பேன் மண்ணுக்குள்ள வேறாக.

பெண்: சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா உன்ன எண்ணி பூத்திருக்கா புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை கட்டி வெச்சு காத்திருக்கா

பெண்: தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு நான் சொல்ல தவிப்பு…. என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு…