Movie: Ashok Kumar (1941)
Music: Alandur Sivasubramaniyam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. K. Thiyagaraja Bagavathar
Added Date: Feb 11, 2022
ஆண்: பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல்…ஓஓ… பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல் காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண் காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண் காலமும் செல்ல மடிந்திடமோ காலமும் செல்ல மடிந்திடமோ
ஆண்: உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய நல் வினையால் உலகில் பிறந்தோம் உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய நல் வினையால் உலகில் பிறந்தோம்
ஆண்: சத்திய ஞான தயாநிதியாகிய சத்திய ஞான தயாநிதியாகிய புத்தரைப் போற்றுதல் நம் கடனே புத்தரைப் போற்றுதல் நம் கடனே
ஆண்: உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும் இல்லையெனில் நரஜென்மமிதே..ஏ. உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும் இல்லையெனில் நரஜென்மமிதே மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய பாழ் மரமே வெறும் பாமரமே மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய பாழ் மரமே வெறும் பாமரமே