Annamitta Kai cover

Movie: Annamitta Kai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

பெண்: தமிழுக்கு மறுப் பெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

ஆண்: நூறு கோடி பாடல் நெஞ்சில் ஊறுகின்ற வேளையிது

பெண்: ஏடு போன்ற கன்னம் கண்டு இதழ்களாலே எழுதுவது

ஆண்: அந்தி பொழுதில் தொடங்கும்

பெண்: அன்பு கவிதை அரங்கம்

ஆண்: இளமைக்கு பொருள் சொல்ல வரவா

பெண்: அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா

ஆண்: அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
பெண்: ஆ..ஆ…
ஆண்: அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

ஆண்: நாடி நரம்பில் கோடி மின்னல் ஓடி பாய்ந்து மறைவதென்ன

பெண்: கூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அளப்பதென்ன

ஆண்: அது முதல் முதல் பாடம்

பெண்: அடுத்தது என்ன நேரும்

ஆண்: எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்

பெண்: அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்

ஆண்: அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

பெண்: தமிழுக்கு மறுப் பெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

ஆண்: ஆலிலை மேலே கண்ணனை போலே நூலிடை மேலே ஆடிடவோ

பெண்: ஆடும் பொது கூடும் சுகத்தை வார்த்தை கொண்டு கூரிடவோ

ஆண்: பெண்மை மலர்ந்தே வழங்கும்

பெண்: தன்னை மறந்தே மயங்கும்

ஆண்: விடிந்த பின் தெளிவது தெளியும்

பெண்: அது தெளிந்த பின் நடந்தது புரியும்