Movie: Neela Kadal Orathile (1979)
Music: M. S. Viswanathan
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jayaram
Added Date: Feb 11, 2022
பெண்: அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா நான் உன்னை பார்த்தேன் உறவுக்கு முகவுரை எழுது ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு..
பெண்: உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன் இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன் உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன் இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன் கண்ணில் அறிமுக கடிதம் எழுதி கொண்டான் கொஞ்சம் அவசியம் படியுங்கள்.. கொஞ்சம் அவசியம் படியுங்கள்..
பெண்: அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா நான் உன்னை பார்த்தேன் உறவுக்கு முகவுரை எழுது ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு..
பெண்: உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை இந்த இலங்கையின் அழகனை ரசிக்க வந்தேன் எந்தன் இரு விழி சிவப்பேற… எந்தன் இரு விழி சிவப்பேற…
பெண்: அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா நான் உன்னை பார்த்தேன் உறவுக்கு முகவுரை எழுது ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு..
பெண்: இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள் கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள் இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள் கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள் நல்ல எதுகையும் மோனையும் இணைந்தது போல் நெஞ்சம் இணைந்திட கூடாதோ.. நெஞ்சம் இணைந்திட கூடாதோ..
பெண்: அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா நான் உன்னை பார்த்தேன் உறவுக்கு முகவுரை எழுது ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு.. ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு.. ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு..