Lyricist Vairamuthu

அழகின் அழகே நீயாரடி பாடல் வரிகள்

அழகின் அழகே நீயாரடி ஆண்களின் எதிரி நீதானடி
இருவிழி அறை நொடி பார்வையில் இருதயம் எரிந்தது ஏனடி

இந்த காதல் தான் இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ

காதல் தான் இம்சையோ காதல் தான் பெரும் இம்சையோ
காதல் தான் இம்சையோ காதல் தான் பெரும் இம்சையோ காதல் தான்
ஹையோ இம்சையோ காதல் தான் பெரும் இம்சையோ

பெண்ணே பெண்ணே உந்தன் பேர் சொல்லு
அதை நெஞ்சில் பச்சை குத்த போகிறேன்
கண்ணே கண்ணே உந்தன் ஊர் சொல்லு
அந்த மண்ணை அள்ளி தின்ன போகிறேன்

நீ கட்டும் ஆடை தந்தால் அதை காதல் கொடியாய் செய்வேன்
உன் ஒற்றை முடியை தந்தால் என் உயிரை கட்டி வைப்பேன்
நீ நடந்த சுவடு சேர்த்து நான் எனக்கான பாதை செய்வேன்

இந்த காதல் தான் இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ
ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ

பூவில் பூவில் செய்த புன்னகை எந்தன் புத்தி புத்தி கிள்ளி போனதே
பாலில் பாலில் செய்த பார்வையோ
என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி போனதே

ஒரு விதையில் நீயும் ஒளிந்தால் மழை துளியாய் நானும் வருவேன்
நீ மேகம் சென்று ஒளிந்தால் சிறு மின்னல் கீற்றாய் தொடுவேன்
செவி மோட்சம் காண வேண்டும் ஒரு சிறு வார்த்தை காதில் பேசு

இந்த காதல் தான் இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ

அழகின் அழகே நீயாரடி நீயாரடி ஆண்களின் எதிரி நீதானடி நீதானடி
இருவிழி அறை நொடி பார்வையில் இருதயம் எரிந்தது ஏனடி

இந்த காதல் தான் இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ…

Movie: Roja Kootam
Lyrics: Vairamuthu
Music: Bharadwaj