Chidambarathil Oru Appasamy cover

Movie: Chidambarathil Oru Appasamy (2005)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Tippu and Manjari

Added Date: Feb 11, 2022

பெண்: அய்யே சி சீ.

பெண்: அய்யே என்ன ஆசை இது என்னாத்துக்கு கையக் கால புடிச்ச என்ன பம்மாத்துக்கு

பெண்: தியேட்டருக்குள் மவுசு கெட்டு வீட்டுக்குள்ள சினிமாவயா மாட்டி விட்ட சிறு உலுக்கு ராத்திரியில் குஷியா இருக்கும் விடிஞ்சா சிரிப்பு வரும்

பெண்: அய்யே என்ன ஆசை இது என்னாத்துக்கு அய்யே என்ன ஆசை ஆசை ஆசை..

பெண்: வசதி இல்லா ஏழைப் பொண்ணு கசங்கின சேலையத்தான் கட்டிக்க வேணுமே

ஆண்: ஒசத்தியான உடுப்பு எல்லாம் சினிமாகாரிங்கதான் உடுத்த வேணுமா

பெண்: அவ பகட்டுல பரிதவிச்சு என் ஒதட்டுக்கு செகப்படிச்ச
ஆண்: அப்போ அவ கிட்ட பார்த்ததெல்லாம் இப்போ ஒன் கிட்ட பார்க்குறனே

பெண்: அவள நெனச்சு என்ன அணைச்சா ஒடம்பு முழுக்க கூசுது
ஆண்: அவளப் பார்த்துதானே உந்தன் நெனப்பு எனக்கு வந்தது
பெண்: சினிமாதான் உன்னப் புடிச்சு தனியா அழகா தலையத் தடவுது

பெண்: அய்யே என்ன ஆசை இது என்னாத்துக்கு கையக் கால புடிச்ச என்ன பம்மாத்துக்கு

பெண்: அய்யே என்ன ஆசை ஆசை ஆசை..

ஆண்: கண்ணதாசன் பாட்டில் சொன்ன கண்ணே கலைமானே கட்டிப் புடிக்கவா கண்ட கண்ட படத்தில் வர காதல் காட்சியத்தான் நடத்திக் காட்டவா

பெண்: ஒருத்தரும் ஒரு தினுசு அட நீ அதில் தனி தினுசு இருக்குற மனம் புதுசு அதில் தொறக்குற என்ன பழசு

ஆண்: ஹே பொழுது விடியும் நேரம் ஆச்சு போனக் கதைய பேசாதே வாடக் காத்து வாட்டலாச்சு அம்மா என்ன வாட்டாதே

பெண்: ஒறங்குதையா ரெண்டு கொழந்த முழிச்சா மொகத்த எங்க மூடுவ