Lyricist Snehan

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் பாடல் வரிகள்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலா காலம் 
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும் 
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் ம்ம் ம்ம்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் ம்ம் ம்ம்

காற்றும் கூட எங்களுடன் 
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழைதுளி கூட என் தாயின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்

நத்தை கூட்டின் நீர் போதும் 
எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்
கத்தும் கடலும் கை கட்ட
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்

தாயின் மடியில் தினம் இருந்து 
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து 
சிறு சிறு சுகமாய் தினம் சிரிப்போம்

ஐந்தெழுத்து புது மொழியை 
அறிய வைத்தாள் என் அன்னை 
அண்ணன் தங்கை இருவருமே 
நேசம் கொண்டு தமிழ் மண்ணை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் ம்ம் ம்ம்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் ம்ம் ம்ம்

அன்னை ஊட்டிய பிடி சோற்றில் 
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்
ஒற்றை கண்ணில் அடி பட்டால் 
பத்து கண்ணிலும் வலி கண்டோம்

பள்ளிகூடம் தந்ததில்லை 
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை
எங்கள் கதை போல் வேறொன்றை

கண்களும் நீர் துளி கண்டதில்லை
அழுதிட அவைகளும் பழகவில்லை 
கருப்பா சிவப்பா தெரியவில்லை
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை

சேகரித்து வைப்பதற்கு தேவை என்று எதுவும் இல்லை
இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலா காலம் 
கனவினில்தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும் 
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்…

Movie: Pandavar Bhoomi
Lyrics: Snehan
Music: Bharathwaj

Leave a Reply